‘கைதி 2’ வில்லன் இவர்தான்!........ –‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’

PHOTO

 கைதி 2 படத்தின் வில்லன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

2019-ஆம் ஆண்டு  தீபாவளியை முன்னிட்டு வெளியாகி ஹிட் ஆன திரைப்படம்’ கைதி’. ஹிரோயின் இல்லாமல், ஐட்டம் பாடல் இல்லாமல் படம் அதிரி புதிரி ஹிட் அடித்தது. இந்த படத்தின் மூலமாக லோகேஷ் கனகராஜ் எக்கச்சக்கமான ரசிகர்களை சம்பாதித்தார். தொடர்ந்து விஜயை வைத்து ‘மாஸ்டர்’, கமலை வைத்து ‘விக்ரம்’ படங்களை இயக்கினார், அதிலும் ‘விக்ரம்’ திரைப்படம் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது.

photo

அதிலிருந்து லோகேஷ் சினிமா பிரியர்களின் பேவரைட் இயக்குநராக மாறிவிட்டார். அந்த வகையில் விஜய்யின் 67-வது திரைப்படத்தை லோகேஷ்  இருக்கவுள்ளார். விரைவில் அதற்கான பணிகள் துவங்கவுள்ளது. இந்த படத்தை முடித்து விட்டு தொடர்ந்து லோகேஷ்கைதி 2’ திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo

தற்பொழுது அந்த படத்தின் வில்லன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது படத்தில் நடிகர் ‘ராகவா லாரன்ஸ்’-தான் வில்லனாக நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு அடுத்தபடியாக ராகவா லாரன்ஸ் கதாபாத்திரம் இருக்கும்  எனவும்  சொல்லப்படுகிறது.

photo

Share this story