மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ‘காஜல் அகர்வால்’ – கியூட் பிக் வெளியீடு.

photo

நடிகை காஜல் அகர்வால் தனது மகனின் முதல் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இதனை தொடர்ந்து கியூட் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

photo

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் கவனம் செலுத்திவந்த காஜல் அகர்வால், கடந்த 2020ஆம் ஆண்டு தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஏப்ரல் 2022ல் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. தம்பதியர் தங்கள் மகனுக்கு நீல் கிட்ச்லு என பெயரிட்டனர்.  இதனை தொடர்ந்து  அடிக்கடி காஜல் அகர்வால் தன்னுடைய குழந்தையின் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டுவார்.

photo

இந்த நிலையில் காஜல் தனது மகன் நீல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். ‘நீல்’க்கு ஒருவயது நிறைவானதை மிக அழகிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், குழந்தையின் முழு முகம் பதிவாகியுள்ளது.  அதனுடன் கேப்ஷனாக ‘அதற்குள்ளாக எனது சன்ஷைன் பையன்  ஒருவயதை அடைந்துவிட்டார்” என பகிர்ந்துள்ளார்.

photo

காஜல் மகன் நீல் பிறந்தநாளை தொடர்ந்து, ஹன்சிகா மோத்வானி, ரகுல் ப்ரீத் சிக், ராஷி கண்ணா, லட்சுமி மஞ்சு என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்காஜல் அகர்வால் தனது திருமணத்திற்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் கூட புதிதாக ஒப்பந்தம் அகாத நிலையில், ஏற்கனவே ஒப்பந்தமான 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். அதில் காஜல் வயதான தோற்றத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this story