காஜல் அகர்வால் - யோகிபாபு இணைந்து நடித்துள்ள ‘கோஸ்டி’... ரிலீஸ் தேதி அறிவிப்பு !
காஜல் அகர்வால் மற்றும் யோகிபாபு இணைந்து நடித்துள்ள ‘கோஸ்டி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகையான காஜல் அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘கோஸ்டி’. முழுக்க முழுக்க காமெடியில் உருவாகியுள்ள இந்த படத்தில் காஜல் அகர்வாலுடன் இணைந்து யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
மேலும் இந்த படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்ஸி, தங்கதுரை, ஜெகன், ஊர்வசி, சத்யன், ‘ஆடுகளம்’ நரேன், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நீண்ட நாட்களாக இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 17-ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகவுள்ளது. இதையொட்டி அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.