டார்க் ஹாரர் காமெடி படத்தில் காஜல் அகர்வால்... ‘கருங்காப்பியம்‘ ரிலீஸ் தேதி அறிவிப்பு !

Karungaapiyam

காஜல் அகர்வாலின் ‘கருங்காப்பியம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘கோஸ்டி’ படத்திற்கு பிறகு பிரபல நடிகையான காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருங்காப்பியம்’.  ஹாரர் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் காஜல் அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  ‘யாமிருக்க பயமேன்’, ‘கவலை வேண்டாம்’, ‘காட்டேரி’ போன்ற படங்களை’ இயக்கிய டிகே இந்த படத்தை இயக்கியுள்ளார். 

Karungaapiyam

வெற்றிவேல் டாக்கீஸ் தயாரிக்கும் இப்படம் ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ளது. டார்க் ஹாரர் காமெடியில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் காஜல் அகர்வால், ரெஜினா, ரைசா வில்சன், ஜனனி உள்ளிட்ட நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர். நடிகர் நடிகர் கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ஆதவ் கண்ணதாசன், யோகிபாபு, அதிதி ரவீந்திரநாத், ஷெர்லின் சேத், நோய்ரிகா, லொல்லு சபா மனோகர், ‘குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Share this story