முன்னால் மனைவியுடன் சாண்டி மாஸ்டர்- நட்பு பாராட்டும் குடும்பம்.

photo

பிரபல தனியார் தொலைகாட்சி மூலம், தொகுப்பாளினியாக அறியப்பட்டவர் காஜல் பசுபதி. சின்னத்திரையில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்ததால், சீரியல், மற்றும் திரைப்படங்களில் காமெடி வேடம், போலீஸ்  கதாபாத்திரம் ஆகியவற்றில்  நடித்தார். மேலும் ஒரு சில நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு சில விமர்சனங்களை சந்தித்தார்.இவர், பிரபல நடன இயக்குனரான  சாண்டி மாஸ்டரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்படவே, இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

photo

தொடர்ந்து சாண்டி மாஸ்டர் சில்வியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். என்னதான் விவாகரத்து பெற்றாலும் இதுநாள்வரை ஒருவர் மீது ஒருவர் கூறுவது பழி சுமத்துவது போன்றவர்றை செய்தது   இல்லை. இருவருமே பரஸ்பர நட்பு பாரட்டி வந்தனர். காஜல் சாண்டி வீட்டிற்கு சென்று குழந்தைகளை பார்பது அவர்களுடன் பழகுவது என இருந்து வந்தார்.

photo

 இந்த நிலையில் தற்பொழுதும் காஜல், சாண்டி வீட்டிற்கு சென்று அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடம் நேரத்தை செலவிட்டுள்ளார். அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

photo

 

Share this story