பிரம்மாண்ட இயக்குநரின் படத்தில் வில்லியாக நடிக்கும் காஜல்?
1696935541445

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார் காஜல் அகர்வால்.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் காஜல் அகர்வால். தற்போது பிரம்மாண்ட இயக்குனரான ராஜமௌலியன் இயக்கத்தில் உருவாகப் போகும் திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான மகதீரா படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.