கஜோல் நடித்த MAA படத்தின் டிரெய்லர் ரிலீஸ்...!

kajol

பாலிவுட் நடிகை கஜோல் நடித்துள்ள  MAA படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 

இந்தி சினிமாவின் முன்னணி நடிகையான கஜோல் MAA என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தை விஷால் ரேவந்தி இயக்கியுள்ளார். இப்படத்தை 2024 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான சைத்தான் படத்தை தயாரித்த A Devgn Films நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.


டிரெய்லர் காட்சிகள் மிகவும் திரில்லராகவும், திகிலாகவும் அமைந்துள்ளது. அம்மா மற்றும் மகள் ஒரு ஆளில்லா சாலையில் காரில் சென்றுக் கொண்டு இருக்கின்றனர். அப்பொழுது அங்கு இருக்கும் ஒரு அமானுஷ்ய ஓட்டலில் தங்குகின்றனர் அங்கு நடக்கும் அமானுஷ்யம் மற்றும் திகில் நிறைந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இப்படத்தில் கஜோலுடன் ட்ன்ஹிரானில், ரோனித் ராய் மற்றும் ஜித்தின் குலாதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது.

Share this story