'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகும் நடன இயக்குனர்!
'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் மூலம் நடன இயக்குனர் கலா மாஸ்டர் நடிகராக அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்ற படம் உருவாகி வருகிறது. விக்னேஷ் சிவனின் முந்தைய படங்கள் போலவே இந்தப் படமும் காமெடி ரொமான்ஸ் ஜேர்னரில் உருவாகி வருகிறது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முக்கோணக் காதல் கதைக்களத்தில் படம் உருவாகி வருகிறது.
தற்போது படத்தில் கலா மாஸ்டர் நடிகையாக இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் கேட்டுக் கொண்டதால் நடிக்க ஒத்துக்கொண்டதாகவும், தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் கலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
கலா மாஸ்டர் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு அவர் நடன இயக்கம் செய்துள்ளார். தற்போது 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் அவர் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படம் தியேட்டர் வெளியீட்டைத் தவிர்த்து நேரடியாக ஓடிடி-யில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

