கலைஞர் நூற்றாண்டு விழா இடம் மாற்றம்

கலைஞர் நூற்றாண்டு விழா இடம் மாற்றம்

கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற இருந்த இடத்தை தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாட சிறப்பு ஏற்பாடுகளை திமுகவினர் செய்தனர். தமிழக அரசு சார்பிலும் நூற்றாண்டு விழாவைப் பிரமாண்டமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவைத் தமிழ்த் திரையுலகம் சார்பிலும் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பிரமாண்ட விழா அடுத்த மாதம் சென்னையில் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

கலைஞர் நூற்றாண்டு விழா இடம் மாற்றம்

மழை வெள்ளம் காரணமாக ஜனவரி 6-ம் தேதிக்கு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. அந்த தேதியில் சேப்பாக்கம் மைதானத்தில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதனால், தற்போது விழா நடக்கும் இடத்தை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் என்று அறிவித்துள்ளனர்.

Share this story