கலையரசனின் கொலைச்சேவல் படத்தின் முதல் தோற்றம் வெளியீடு
1695980978253

கலையரசன் நடிப்பில் உருவாகியிருக்கும் கொலைச்சேவல் படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது
தமிழ் சினிமாவில் ரஜினி, சூர்யா, கார்த்தி, ஆர்யா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கலையரசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். டைட்டானிக் காதலும் கவுந்து போகும் என்ற படத்தில் கதாநாயகனாகவும் அவர் அறிமுகமானார். தற்போது, மாரி செல்வராஜ் இயக்கி வரும் வாழை படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கலையரசன் நடிப்பில் உருவாகியிருக்கும் கொலைச்சேவல் திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. புதுமுக இயக்குர் பாலா இத்திரைப்படத்தை இயக்குகிறார். படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக தீபா பாலு நடிக்கிறார். இப்படத்தின் முதல் தோற்றத்தை பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.