‘கலகத்தலைவன்’ படத்தின் லிரிக்கல் பாடல் வெளியீடு…..

photo

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம்நெஞ்சுக்கு நீதி ‘. இதைத்தொடர்ந்து  உதயநிதி ஸ்டாலின் மாரிசெல்வராஜின் ‘மாமன்னன்’ மற்றும் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘கலகத்தலைவன்’ படம் தயாராகி வருகிறது.

photo

இந்த நிலையில் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்பொழுது போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் நடந்து வருகிறது. அதே போன்று கலகத்தலைவன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் நிறைவு கட்டத்தில் உள்ளன

photo

இந்நிலையில் கலகத்தலைவன் படத்தின் இசை மற்றும் டிரைலர் நளையதினம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் , இன்று படத்திலிருந்து லிரிக்கல் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. அரோல் கரோலி இசையமைத்துள்ள ‘ஹே புயலே’ என தொடங்கும் இந்த பாடலை ஸ்ரேயா கோஷல், சத்திய பிரகாஷ் இணைந்து  பாடியுள்ளனர். கார்க்கி பாடல் வரிகளை அமைத்துள்ளார்.

photo

உதய நிதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜயன்ட் மூவீஸ் தயாரிக்கும் கலகத்தலைவன் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக  நிதி அகர்வால்  நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story