'மாமன்' படத்தின் கல்லாளியே..கல்லாளியே.. வீடியோ பாடல் ரிலீஸ்...!

'மாமன்' படத்தின் கல்லாளியே..கல்லாளியே.. என்ற பாடல் வெளியாகி உள்ளது.
கருடன் படத்திற்குப் பிறகு நடிகர் சூரி, 'விலங்கு' இணைய தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாமன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்துள்ளனர்.
#KallaliyeKallaliye video song from #Maaman is out now – groove to the vibes before the family entertainer hits screens. https://t.co/YnhoohuDkf#MaamanFromMay16!
— Actor Soori (@sooriofficial) May 11, 2025
Directed by @p_santh
A @HeshamAWmusic Magician
magical words by @Lyricist_Vivek & @EgnathR 🙏😍💯
Produced by… pic.twitter.com/MkCnYs0YRL
#KallaliyeKallaliye video song from #Maaman is out now – groove to the vibes before the family entertainer hits screens. https://t.co/YnhoohuDkf#MaamanFromMay16!
— Actor Soori (@sooriofficial) May 11, 2025
Directed by @p_santh
A @HeshamAWmusic Magician
magical words by @Lyricist_Vivek & @EgnathR 🙏😍💯
Produced by… pic.twitter.com/MkCnYs0YRL
ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்கும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக 'மாமன்' உருவாகி இருக்கிறது.
இப்படம் மே 16ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில், கல்லாளியே..கல்லாளியே.. என்ற பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.