"எப்போது போன் போட்டாலும் ரஜினி எடுப்பார்" -இப்படி பேசியது யார் தெரியுமா ?
முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய கூலி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை பார்க்க ஏராளமான காரணங்கள் சொல்லப்பட்டாலும், இந்தப் படம் ரூ.1000 கோடி வசூல் குவிக்குமா என்பது ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
கூலி படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பலரும் பேசினர். தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் பேசினார். அதில், அவர் கூறியிருப்பதாவது: ரஜினி ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் மட்டும் கிடையாது. அவர் தான் ஒன்லி சூப்பர் ஸ்டார். இந்தியாவில் உள்ள எந்த முதல்வருக்கும் அவர் போன் போட்டாலும் ஒரு நொடியில் அவரது போனை எடுப்பார்கள். இவ்வளவு ஏன் பிரதமர் கூட ரஜினியின் போன் காலை உடனே எடுத்துவிடுவார் என்று பேசினார்.
மேலும், ஒரூ சில ஹிட் படங்களை கொடுத்த நடிகர்களுக்கு போன் போட்டால் அவர்கள் போன் எடுப்பதில்லை. ஆனால், ரஜினிகாந்த் அப்படியில்லை, இன்றும் போன் போட்டால் உடனே போன் எடுத்து பேசுவார். அவர் நேர்மையான மற்றும் பணிவானவர். கடினமான உழைப்பாளி என்று சுட்டிக்காட்டி பேசினார்.

