புது படத்தில் கதாநாயகனாக நடிக்கும் காளி வெங்கட் -யார் யார் நடிக்கின்றனர் தெரியுமா ?

kali venkat

பி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் அண்ட் சினிமா டூர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சரத்பாபு, சூர்யா தேவி சேர்ந்து தயாரிக்கும் புதுப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடந்தது. பா.விஜய் கார்த்திகேயன் எழுதி இயக்குகிறார். கதையின் நாயகனாக காளி வெங்கட் நடிக்கிறார். மற்றும் ரேஷ்மா முரளிதரன், ஜென்சன் திவாகர், ‘ஆடுகளம்’ நரேன், மைம் கோபி, ஜெயப்பிரகாஷ். விஜே பார்வதி, வினோதினி வைத்தியநாதன், சரத்பாபு நடிக்கின்றனர். தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார்.

விவேக், கார்த்திக் நேத்தா, சாரதி, உமாதேவி பாடல்கள் எழுதுகின்றனர். சக்தி திரு எடிட்டிங் செய்ய, ஹாசினி அரங்கம் அமைக்கிறார். ராம்போ விமல் சண்டைப் பயிற்சி அளிக்க, ராதிகா நடனக் காட்சி அமைக்கிறார்.கடந்த 1995களில் அரசாங்க பள்ளியில் படிக்கும்‌ தனது மகனை, தனியார் பள்ளியில் படிக்க வைக்க போராடும் ஒரு தந்தையை பற்றிய குடும்பக்கதையுடன் படம் உருவாகிறது. சிவகங்கை மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடக்கிறது.

Share this story