மாடல் அழகியுடன் காளிதாஸ் ஜெயராமுக்கு நிச்சயதார்த்தம்

மாடல் அழகியுடன் காளிதாஸ் ஜெயராமுக்கு நிச்சயதார்த்தம்

சினிமாவில் இளம் நடிகராக இருக்கும் காளிதாஸ் ஜெயராம், தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். நடிகர் ஜெயராமின் மகனான இவர், தமிழில் ‘பாவ கதைகள்’ வெப் தொடரின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இதில் திருநங்கையாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இதையடுத்து ‘விக்ரம்’ படத்தில் கமலின் மகன் கதாபாத்திரத்தில் நடித்தார். சிறிய ரோலில் நடித்திருந்த நிலையில் நல்ல வரவேற்பை பெற்ற அவர், பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். வித்தியாசமான காதல் கதையில் உருவான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

மாடல் அழகியுடன் காளிதாஸ் ஜெயராமுக்கு நிச்சயதார்த்தம்

இந்நிலையில், நடிகர் காளிதாஸ் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாடல் அழகியுமான தாரிணி என்பவரை காதலித்து வந்தார். தாரிணி மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றவர். இருவருக்கும் தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. இதில், இருவரது குடும்பத்தினரும், உறவினர்களும் கலந்து கொண்டனர். நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன,. 
 

Share this story