காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் நிலா வரும் வேளை

காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் நிலா வரும் வேளை 

மலையாள நடிகர் காளிதாஸ் ஜெயராம் தமிழில் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து, ‘புத்தம் புது காலை’ மற்றும் ‘பாவக் கதைகள்’ என்ற இரு அந்தாலஜி படங்களில் ஒரு பகுதியில் நடித்திருந்தார். பாவக்கதைகள் படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவரிடத்திலும் பாராட்டைப் பெற்றது. இதில் திருநங்கையாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இதையடுத்து ‘விக்ரம்’ படத்தில் கமலின் மகன் கதாபாத்திரத்தில் நடித்தார். சிறிய ரோலில் நடித்திருந்த நிலையில் நல்ல வரவேற்பை பெற்ற அவர், பா ரஞ்சித் இயக்கத்தில்   ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். வித்தியாசமான காதல் கதையில் உருவான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் நிலா வரும் வேளை 

இதற்கிடையே தற்போது காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் நிலா வரும் வேளை. புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிறது. ஹரி இத்திரைப்படத்தை இயக்குகிறார்.
 

Share this story