உலக தமிழர்கள் கொண்டாடும் படமாக உருவாகும் ‘வாடிவாசல்’ – மனம் திறந்த 'கலைபுலி தாணு'.

photo

வெற்றிமாறன்- சூர்யா கூட்டணியில் தயாராகும் ‘வாடிவாசல்’ உலக தமிழர்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் கலைபுலி தாணு.

photo

பொதுவாக காதல், ஆக்சன், ஹாரர் போன்ற கதைகளை இயக்குவது என்பது கடினம் என்றாலும், அதைவிட மிகவும் சவாலான ஒன்றுநாவலையோ, சிறுகதையோ, திரைப்படமாக இயக்கி மக்கள் ரசிக்கும் வகையில் அவர்களுக்கு வழங்குவது  தான். அந்த பணியை மிக கச்சிதமாக செய்துவருகிறார் இயக்குநர் வெற்றிமாறன். அப்படி அவர் இயக்கிய விசாரணை, அசுரன், விடுதலை ஆகிய படங்கள் இந்திய அளவில் நற்பெயரை பெற்று தந்தது. இந்த லிஸ்டில் அடுத்ததாக சூர்யாவை வைத்து அவர் இயக்க இருக்கும் ‘வாடிவாசல்’ படமும் இணைய உள்ளது.

photo

இந்த கதை சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற குறுநாவலை தழுவியே படம் எடுக்கப்படுகிறது. இந்த நிலையில் படம் குறித்து தயாரிப்பாளர் தாணு கூறுகையில், “விடுதலை படத்தை இயக்கிவிட்டுதான் வாடிவாசல் படத்தை இயக்குவேன் என இயக்குநர் வெற்றிமாறன் ஏற்கனவே உறுதியாகிவிட்டார். ஆனால் இடையில் வந்த கொரோனா தொற்றுகாரணமாக அந்த இடைவேளை மேலும் அதிகமானது. இதனால நாங்கள் நடிகர்களிடம் வாங்கி வைத்த கால்ஷீட் தேதி முடிந்தது. அவர்களுள் பலர் பல மொழி நடிகர்கள் என்பதால், வேறு வேறு படங்களில் கமிட்டாகினர். யாரையும் குறை சொல்ல முடியாது. படத்திற்காக காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கண்டிப்பாக ‘வாடிவாசல்’ திரைப்படம் உலகத்தமிழர்கள் கொண்டாடும் படமாக அமையும்” என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார் தாணு.

 

Share this story