கல்கி 2898 AD படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?
கல்கி 2898 AD படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.தெலுங்கு சினிமாவில் மாஸ் காட்டி வரும் நடிகர்களில் ஒருவர் ரெபெல் ஸ்டார் பிரபாஸ். இவரது நடிப்பில் வெளியான படம் கல்கி 2898 AD. நாக் அஸ்வின் இயக்கத்திலும், வியஜயந்தி மூவி தயாரிப்பிலும், வெளியான இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இது மட்டும் இல்லாமல் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிரடி திரில்லர் படமாக இருந்த இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
குறிப்பாக ஆயிரம் கோடி வசூல் சாதனையும் செய்துள்ளது. இப்படியான நிலையில் இந்த படம் OTT யில் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாக உள்ளது.இந்தப் படத்தின் OTT உரிமத்தை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.