கமல் பிறந்தநாள் ஸ்பெஷல்- போஸ்டர் வெளியிட்ட ‘கல்கி 2898 ஏடி’ படக்குழு.

photo

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவர் வில்லனாக நடிக்க உள்ள ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் ஸ்பெஷன் போஸ்டரை படக்குழு  வெளியிட்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன் தற்போது ஷங்கரின் ‘இந்தியன்2’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு அடுத்து பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ படத்தில்  வில்லனாக நடிக்க உள்ளார். அந்த படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அமிதாப்பச்சன், திஷா பதானி, தீபிகா படுகோன் ஆகியோர் நடிக்க உள்ளனர். மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகவுள்ள இந்த படத்தை நாக் அஸ்வின்  இயக்குகிறார். இந்த நிலையில் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு சூப்பர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்தியுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ள இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட ஆரு மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story