கல்கி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கல்கி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சலார் படத்தை அடுத்து பிரபாஸ் நடிக்கும் புதிய திரைப்படம் கல்கி 2898 ஏடி.  படத்தில்  வில்லனாக கமல்ஹாசன் நடிக்கிறார். அந்த படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அமிதாப்பச்சன், திஷா பதானி, தீபிகா படுகோன் ஆகியோர் நடிக்க உள்ளனர். மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகவுள்ள இந்த படத்தை நாக் அஸ்வின்  இயக்குகிறார். இந்த நிலையில் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு சூப்பர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்தியது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ள இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்கி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசனும் கலந்து கொண்டார். இந்நிலையில், கல்கி திரைப்படம் வரும் மே மாதம் 9-ம் தேதி வௌியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Share this story