‘கள்ளிப் பால்ல ஒரு டீ’ பட டிரைலர் இதோ!
இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலமாக தயாராகியுள்ள நான்கு பெண் இயக்குநர்களின் ஆந்தாலஜி படமான ‘கள்ளிப் பால்ல ஒரு டீ’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்குநர் என்பதை தாண்டி நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்தார். தொடர்ந்து தயாரிப்பில் கவனம் செலுத்திவரும் ரஞ்சித் தற்போது நாங்கு பெண் இயக்குநர்கள் இயக்கிய ஆந்தாலஜி படமான ‘கள்ளிப் பால்ல ஒரு டீ’ எனும் படத்தை தயாரித்துள்ளார். அந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
அதில் ஒரு பெண் குழந்தை “ நான் யார் என்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்… சிவகங்கை மாவட்டத்தின் பிறந்தேன்… நான் போர்ப்படை தளபதியாக திகழ்ந்தவர்…என்னை வீர மங்கை என்று கூறுவார்கள்..” என கூறுகிறார். இந்த டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரித்துள்ளது.