காதல் ரொமான்ஸில் உருவாகியுள்ள ‘கல்லூறும் பூவே’... ‘பிச்சைக்காரன் 2’ பாடல் வெளியீடு !

Pichaikkaran 2

 விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் ஆன்ட்டி பிகிலி என்ற கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். 

இந்த படத்தில் மலையாள நடிகை காவ்யா தப்பார் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரீஷ் பெரடி, தேவ் கில், யோகிபாபு, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

Pichaikkaran 2

முதல் பாகத்தை போன்று இரண்டாம் பாகமும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது. விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ள இப்படத்தை அவரது மனைவியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமே தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படம் வரும் மே 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் வீடியா பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. ‘கல்லூறும் பூவே’ என அந்த பாடல் முழுக்க முழுக்க காதல் ரொமான்ஸில் உருவாகியுள்ளது. இந்த பாடல் காட்சிகள் முழுக்க வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் படப்பிடிப்பின் போதுதான் நடிகர் விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this story