"கல்யாண குத்து...." ரெட்ரோ படத்தின் 'கனிமா' பாடல் வெளியானது...!

retro

சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தில் இடம்பெற்றுள்ள 'கனிமா' பாடல்  வெளியாகி உள்ளது. 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட்ரோ’. 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து இதனை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தற்போது இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.    

 


மே 1-ம் தேதி வெளியாகவுள்ள  ‘ரெட்ரோ’ படத்தின் டீஸர் மற்றும் கண்ணாடி பூவே என்ற பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், 'கனிமா' என தொடங்கும் 2 வது பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலை சந்தோஷ் நாராயணனே பாடியுள்ளார். விவேக் எழுதியுள்ளார். லிரிக் வீடியோவில் படத்தில் சூர்யாவிற்கும் பூஜா ஹெக்டேவுக்கும் கல்யாணம் நடக்கும் நிலையில் அப்போது மண்டபத்தில் இடம் பெறும் பாடலாக அமைந்துள்ளது. குத்து பாடலாக அமைந்துள்ள இப்பாடலில் சர்பிரைஸாக சந்தோஷ் நாராயணன் நடனமாடியுள்ளார். குறிப்பாக பாடலின் இறுதியில் வரும் ஃபாஸ்ட் பீட்டில் அதற்கேற்றவாறு குத்தாட்டம் போட்டுள்ளார். இது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Share this story