கவர்ச்சி நடனமாடிய கல்யாணி -எந்த படத்தின் பாடலில் தெரியுமா ?

நடிகை கல்யாணி பிரிதர்ஷன் தனது லேட்டஸ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.   kalyani  மலையாள சினிமாவில், தனது அழகான தோற்றத்தால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் கல்யாணி பிரிதர்ஷன். மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்களை நடித்து வருகிறார். இவர் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் ஆவர்.   kalyani வடிவமைப்பாளராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய இவர், அசின்ட் ஆர்ட்  இயக்குனராக இருமுகன் படத்தில் பணியாற்றினார். பின்னர் சிவகார்த்திகேன் நடிப்பில் உருவாகி  வெற்றிப்பெற்ற ஹீரோ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் கல்யாணி,  தற்போது சிம்புவிற்கு ஜோடியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கல்யாணி நடித்துள்ளார்.    kalyani  மலையாளத்தில் அரபிக்கடலின்டே சிம்ஹம், ஹிருதயம், ப்ரோ டாடி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் கல்யாணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்லவேற்பை பெற்றுள்ளது.
பான் இந்தியா படமான ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ என்ற படத்தில் சூப்பர் வுமன் கேரக்டரில் நடித்த கல்யாணி பிரயதர்ஷன், தற்போது இந்திய திரையுலகின் முன்னணி ஹீரோயின்களில் பட்டியலில் இணைந்துள்ளார். தமிழில் ரவி மோகனின் ‘ஜீனி’, கார்த்தியின் ‘மார்ஷல்’ ஆகிய படங்களில் நடித்து வரும் அவர், ‘ஜீனி’ படத்தில் இருந்து ‘அப்தி அப்தி’ என்ற பாடல் வெளியிடப்பட்டது முதல் இணையதளங்களில் வைரலாகி வருகிறார்.
இதில் அவர் கவர்ச்சியாக நடனமாடியுள்ளார். புவனேஷ் அர்ஜூனன் இயக்குகிறார். கிரித்தி ஷெட்டி, வாமிகா கபி, தேவயானி நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் கல்யாணி பிரயதர்ஷன் கூறுகையில், ‘ஒரு நடிகையாக, இதுவரை செய்யாத விஷயங்களை செய்ய, எப்போதுமே எனக்கு நானே சவால் விட்டு முயற்சிப்பேன். அந்தவகையில் இப்பாடலும் ஒன்று.
மேலும் அவர் கூறும்போது, ‘துல்கர் சல்மான் தயாரித்த ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் இந்திய அளவில் நான் கவனம் ஈர்த்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். எது எப்படி இருந்தாலும், இந்த திடீர் புகழ்ச்சியை எனது தலையில் ஏற்றிக்கொள்ள மாட்டேன். தொடர்ந்து கடினமாக உழைப்பேன். இதுவரை என்னை பாராட்டி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி’ என்றார்.

Share this story