கமல்ஹாசன் நடிக்கும் புது படம் -இயக்குனர் யார் தெரியுமா ?
‘சித்தா’ படத்தின் இயக்குநரான எஸ்.யு. அருண்குமார், கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்குவது உறுதியாகியுள்ளது. மேலும், அந்தப் படத்திற்கான டெஸ்ட் ஷூட் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் மற்றும் ஆர்.மகேந்திரனின் டர்மெரிக் நிறுவனம் இணைந்து படத்தை தயாரிக்கிறது. ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, ‘சித்தா’ மற்றும் ‘வீர தீர சூரன்’ என வெற்றி பெற்ற படங்களை இயக்கியவர் அருண்குமார்.
இவர் அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து படம் இயக்கப் போவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துவிட்டது. கமல்ஹாசன் கருப்பு சட்டை, பச்சை பேன்ட், கையில் அரிவாள் மற்றும் காலில் காக்கி பூட்ஸுடன் போஸ் கொடுக்கிறார். இதுவும் அருண்குமாரின் முந்தைய படங்களை போல் மண் சார்ந்த ஆக்ஷன் படமாக இருக்கும் என்றும் இது குறுகிய கால படைப்பாக உருவாகிறது என்றும் சொல்லப்படுகிறது. படத்தின் தலைப்பு, ஹீரோயின் மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்

