கமல் படத்தை இயக்க தயாராகும் அஜித் பட இயக்குனர்... அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்டுகள் !

kh 233

கமலை வைத்து இயக்கவிருக்கும் புதிய படத்திற்கான பணிகளை இயக்குனர் எச் வினோத் தொடங்கியுள்ளார். 

முன்னணி நடிகர்களை கவரும் இயக்குனராக வலம் வருகிறார் எச்.வினோத். ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர், தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இதில் அஜித்தை வைத்து இயக்கி திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. 

kh 233

தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளை எச்.வினோத் தொடங்கியுள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் தனது பாணியில் உருவாகும் இந்த படத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிக்கவுள்ளார். திரைக்கதையை இறுதி செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள எச்.வினோத், வரும் ஜூன் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார். 

kh 233

ஏனென்றால் ‘இந்தியன் 2’ தற்போது நடித்து வரும் கமல், அதை மே மாதத்திற்குள் முடித்து விடுவார். அதனால் ஜூன் மாதம் முதல் எச் வினோத் படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்த படத்தை குறுகிய காலத்திற்கு முடித்துவிட்டு மணிரத்னம் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

 

Share this story