அடிதூள்.. உலகநாயகனை இயக்கும் எச்.வினோத்... வெளியானது எதிர்பார்த்த அறிவிப்பு !

kh233

 நடிகர் கமலஹாசன் நடிக்கும் 233வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமலஹாசன் தயாராகியுள்ளார். தற்போது ‘இந்தியன்’ படத்தில் நடித்து அவர், விரைவில் அந்த படத்தை முடித்து பிரபாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘பிராஜெக்ட் கே’ படத்தில் இணையவுள்ளார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். 

kh233

இந்த படத்திற்கு எச் வினோத் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. அந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கமலின் 233வது படமாக உருவாகும் அந்த படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 

kh233

இந்த படத்தை முடித்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கமல் நடிக்கவுள்ளார். கமலின் 234வது படமாக உருவாகும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார்.   இப்படத்தில் 7 மாநில மொழி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  


 


 

Share this story