மீண்டும் இணைந்த ‘நாயகன்’ கூட்டணி.. கமலின் புதிய படத்தின் அறிவிப்பு !

kamal

34 ஆண்டுகளுக்கு பிறகு கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கடந்த 1987-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான திரைப்படம் ‘நாயகன்’. தமிழ்நாட்டிலிருந்து மும்பை சென்ற தமிழன் எப்படி கேங்ஸ்டர் ஆகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. 80-களில் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த இப்படம் இன்றைக்கும் பேசப்படும் படமாக இருக்கிறது. 

kamal

இந்நிலையில் இந்த மாபெரும் வெற்றிக்கு பிறகு 34 ஆண்டுகள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் மீண்டும் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமலின் 234-வது படமாக உருவாகும் இந்த படத்தை ராஜ் கமல் நிறுவனம், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கவுள்ளன. 

kamal

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். விக்ரம் படத்தின் மரண ஹிட் வெற்றி மற்றும் பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றி என இரு பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இருபெரும் திரையுலக ஜான்பவான்கள் இணையும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.   


 

Share this story