உலக நாயகனுடன் ஜோடி சேரும் நயன்தாரா.. முதன்முறை இணையும் கூட்டணியால் மகிழ்ச்சியில் ரசிகர்கள் !

nayanthara

கமலுக்கு ஜோடியாக முதன்முறையாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் புதிய படம் உருவாகிறது. ‘நாயகன்‘ படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பிறகு 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி இணையவுள்ளது. இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. கமலின் 234வது படமாக உருவாகும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. 

nayanthara

இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார்.  இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாம். ஏற்கனவே திரைக்கதை இறுதி செய்யும் பணிகள் முடிந்துவிட்டதாகவும், தற்போது நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

nayanthara

இந்நிலையில் இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க வைக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதையடுத்து கமலுடன் நயன்தாரா நடிப்பது உறுதியாகியுள்ளது. தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, பல முன்னணி நடிகர்களின் நடித்துள்ள நிலையில் முதன்முறையாக கமலுடன் இணையவுள்ளார்.  தற்போது மாதவன் நடிப்பில் உருவாகும் ‘டெஸ்ட்’ படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story