கமலுடன் இணையும் ஷாருக்கான், மம்மூட்டி... மணிரத்னத்தின் மெகா திட்டம் !

kamal

கமலஹாசன் நடிப்பில் உருவாகும் படத்தில் ஏழு மொழி நடிகர்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

'விக்ரம்'  படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்த படங்களில் நடிக்க நடிகர் கமல் மிகுந்த ஆர்வம் கட்டி வருகிறார். தற்போது 'இந்தியன் 2' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று வரும் சம்மரில் படம் ரிலீசாகும் என தெரிகிறது. 

kamal

இந்த படத்தை அடுத்து மணிரத்னத்தின் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ளார். 'நாயகன்' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பிறகு 32 ஆண்டுகள் கழித்து இந்த கூட்டணி இணைந்துள்ளது. கமலின் 234வது படமாக உருவாகும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

kamal

இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்தில் 7 மாநில மொழி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பாலிவுட்டில் இருந்து ஷாருக்கானும், மலையாளத்தில் மம்மூட்டியும், கன்னடத்தில் சிவ ராஜ்குமாரும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெகா பட்ஜெட் பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாக உள்ளது. இதற்கான பணிகளில் மணிரத்னம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 

Share this story