கமலை சந்தித்த நடிகர் சிம்பு.. தாமதமாகும் 'STR 48' ஷூட்டிங் !

str48‌

கமல் - சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 

கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளார். பிரம்மாண்டமான பொருட்செலவில் சுமார் 100 கோடியில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷிடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

str48

'STR 48' என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த ஒரு வரலாற்று படமாக உருவாகிறது. முதல்முறையாக நடிகர் சிம்பு வரலாற்று பின்னணிக் கொண்ட படத்தில் நடிக்கவுள்ளார். அதிலும் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக தாய்லாந்து சென்ற நடிகர் சிம்பு இரண்டு மாதங்கள் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை கற்றார். அதன்பிறகு சமீபத்தில் லண்டன் சென்ற அவர் சில தற்காப்பு பயிற்சிகளை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. 

str48

இந்நிலையில் இப்படத்தின் பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கமலஹாசனை நடிகர் சிம்பு சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த படம் வரலாற்று பின்னணி கொண்டு உருவாகுவதால் ப்ரீ பிரொக்ஷன் பணிகளை செய்வதற்கு சில மாதங்கள் தேவைப்படுகிறது. அதனால் இப்படத்தின் படப்பிடிப்பு வரும்‌ ஆகஸ்ட் மாதம் தான் தொடங்கும் என கூறப்படுகிறது. 

 

 

 

Share this story