‘சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது’ - சிம்புக்கு வாழ்த்து சொன்ன உலகநாயகன் !

சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது என்று புதிய படத்தில் நடிக்கும் சிம்புக்கு நடிகர் கமலஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகநாயகன் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்த ‘விக்ரம்’ திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து அடுத்து புதிய படங்களை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு ஆகிய இருவரை வைத்து புதிய படங்களை தயாரிக்கவுள்ளது.
இதில் சிம்பு நடிக்கும் 48வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த தேசிங்கு பெரியசாமி இந்த படத்தை இயக்கவுள்ளார். சுமார் 100 கோடியில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் குறித்து நடிகர் கமலஹாசன் ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதில், சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது; இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள். சிம்பு மற்றும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது; இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள்! @SilambarasanTR_ @desingh_dp #STR48 #BLOODandBATTLE #RKFI56_STR48#Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/nIcmVjrBHk
— Kamal Haasan (@ikamalhaasan) March 9, 2023
கமலின் வாழ்த்துக்கு பதிலளித்துள்ள நடிகர் சிம்பு, கனவு நனவாகும் என கூறியுள்ளார்.
Dreams do come true 😇#STR48#Ulaganayagan #KamalHaasan #Atman #SilambarasanTR #BLOODandBATTLE #RKFI56_STR48@ikamalhaasan @SilambarasanTR_ @desingh_dp #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/QxdCkUPFo9
— Silambarasan TR (@SilambarasanTR_) March 9, 2023