மீண்டும் கமலுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி... இயக்குனர் எச்.வினோத்தின் பலே திட்டம் இதுதான் !

kh 233

 கமல் மற்றும் வினோத் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘விக்ரம்’ படத்திற்கு பிறகு கமல் நடிக்கும் திரைப்படங்களின் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே இருக்கிறது. அதனால் கமலின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அதன்படி 233வது படத்தை எச்.வினோத்தும், 234வது படத்தை மணிரத்னமும் இயக்கவுள்ளனர். அதனால் எச் வினோத் எப்போது கமலின் படத்தை தொடங்குவார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

kh 233

தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வரும் கமல், அடுத்த மாதத்துடன் மொத்த படத்தையும் முடிக்கவுள்ளார். இதையடுத்து எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியை கமல் அலுவலகத்தில் இயக்குனர் எச் வினோத் செய்து வருகிறார். வரும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பை தொடங்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். 

kh 233

இந்நிலையில் இப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க வைக்க நடிகர் விஜய் சேதுபதியிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் விஜய் சேதுபதி கால்ஷீட் மற்றும் சம்பளம் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ‘விக்ரம்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தங்கபல் வைத்துக் கொண்டு சந்தானம் அனைவரையும் கவர்ந்தார். மீண்டும் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Share this story