அன்பு இளவல் தேவி ஸ்ரீ பிரசாத்.. தேசிய விருது பெற்றமைக்கு நடிகர் கமலஹாசன் வாழ்த்து !

national awards

‘புஷ்பா’ படத்திற்காக தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு நடிகர் கமலஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்தியா சினிமாவில் சாதனை படைத்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டது. 

national awards

இந்தியாவில் உள்ள 28 மொழிகளில் மொத்தம் 280 திரைப்படங்கள் மற்றும் 23 மொழிகளில் 158 நான் ஃபீச்சர் திரைப்படங்கள் பரிசீலனைக்கு பெறப்பட்டன. தென்னிந்தியாவில் ஆர்.ஆர்.ஆர், புஷ்பா, சார்லி, கடைசி விவசாயி உள்ளிட்ட படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

national awards

அந்த வகையில் ‘புஷ்பா’ படத்திற்கான சிறந்த இசையை இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கொடுத்திருந்தார். அந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்தன. இந்நிலையில் தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு நடிகர் கமலஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், புஷ்பா திரைப்படத்திற்காக சிறந்த பாடல் இசைக்கான தேசிய விருது பெற்றுள்ள அன்பு இளவல் தேவி ஸ்ரீ பிரசாத் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக என்று கூறியுள்ளார். 


 

Share this story