கமலின் மகள் நடித்த ‘சிமுலேக்ரா’-நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது

kamal-haasan-33f

கமல்ஹாசனின் இளைய மகளும், உதவி இயக்குனருமான அக்‌ஷரா ஹாசன் நடித்துள்ள ‘சிமுலேக்ரா’ என்ற இந்தி படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இதுகுறித்து பேசிய அக்‌ஷரா ஹாசன், ‘எனது பெற்றோர் இருவரும் (கமல்ஹாசன், சரிகா) வீட்டுக்கு உள்ளேயும், வெளியிலும் இருக்கும் வெவ்வேறு உலகங்களை பற்றி எங்களுக்கு புரிய வைத்தனர். வீட்டுக்குள் நாங்கள் சிறந்த மனிதர்களாகவும், சுயமாகவும் இருப்பதற்கான முழு சுதந்திரத்தையும் கொடுத்தனர். அதே நேரத்தில், வீட்டின் வெளியுலகம் முற்றிலும் வேறுபட்டது என்பதையும் நான் உணர்ந்துள்ளேன்.

நானும், எனது ஒரே சகோதரி ஸ்ருதிஹாசனும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து, எங்களால் முடிந்த சிறந்த உழைப்பை கொடுக்க வேண்டும் என்பதை பெற்றோர் புரிய வைத்தனர். அதனால், சில விஷயங்களில் நாங்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டியிருக்கிறது. ஏனென்றால், எங்கள் பெற்றோர் தங்களின் சொந்த உழைப்பாலும், திறமையாலும் கஷ்டப்பட்டு உருவாக்கிய பெருமையையும், பாரம்பரியத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.

Share this story