உச்சம் தொட்ட ‘இந்தியன் 2’ காட்சிகள்.. ஷங்கருக்கு விலை உயர்ந்த வாட்சை பரிசாக வழங்கிய கமலஹாசன் !

indian 2

‘இந்தியன் 2’ படத்தின் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளதாக நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

ஷங்கர் இயக்கத்தில் கமலஹசான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இந்த படத்தில் இந்தியன் தாத்தாவாக கமல் மீண்டும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 

indian 2

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் நடுவில் நின்றுபோனது. அதன்பிறகு ‘விக்ரம்’ படத்தின் வெற்றியால் மீண்டும் உயிர் பெற்று பணிகள் தொடங்கியது. இதையடுத்து இந்த படத்தின் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. எப்போதும் போல் ‘இந்தியன் 2’ படத்தின் காட்சிகள் வியக்கதக்க வகையில் ஷங்கர் உருவாக்கியுள்ளளார். 

indian 2

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தின் காட்சிகளை பார்த்த கமலஹாசன், ஷங்கர் வெகுவாக பாராட்டியுள்ளார். அதோடு 8 லட்சம் மதிப்புள்ள வாட்சை ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் ஷங்கர்.  இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு நன்றி தெரிவித்துள்ள இயக்குனர் ஷங்கர், நன்றியினாலும், மகிழ்ச்சியினாலும் என் இதயம் நிரம்பியுள்ளது. நான் சிறந்ததை வழங்குவதை ஒரு நாளும் நிறுத்தமாட்டேன். உங்கள் யதார்த்தமான நடிப்பு படத்திற்கு இன்றியமையாத சாரம்சத்தை கொண்டிருக்கிறது என்பதை நான் சொல்ல தேவையில்லை. இந்த சிறப்பான தருணத்தை நினைக்கூறும் உங்களுக்கு நன்றி. இந்த உணர்வை போற்றி மகிழ்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 


 

null


 

Share this story