படப்பிடிப்பிற்காக ஹெலிகாப்டரில் வந்திறங்கிய கமல்ஹாசன்.. ‘இந்தியன் 2’ புதிய அப்டேட்

indian 2

 ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் கமலஹாசன் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. 

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் திரைப்படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த்த்,  பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் ஆகி இரு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

indian 2

சில பிரச்சனைகளால் இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. இதையடுத்து பல கட்டங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே சென்னை, திருப்பதி, பீகார் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. 

indian 2

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது திருப்பதியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக கிராமம் போன்ற செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் இளமை கால சேனாபதியின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அதாவது இந்தியன் 2 ப்ரீயட் பகுதிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்பிற்காக நடிகர் கமல் ஹெலிகாப்டரில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றார். இது குறித்த காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 

 

Share this story