சித்தா திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து கூறிய கமல்ஹாசன்

சித்தா திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து கூறிய கமல்ஹாசன்

நடிகர் சித்தார்த் நாயகனாக நடித்துள்ள சித்தா திரைப்படம் வெற்றி பெற, கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய சு.அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள திரைப்படம் சித்தா. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார். சித்தப்பா உறவினை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படம் வரும் செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் முதல் திரையிடலை பார்த்த நடிகர் கமல்ஹாசன், சித்தார்த் உள்பட படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.


அதில், என் அண்ணன் மகள் நந்தினி மூலமாக நான் 4 வயதிலேயே சித்தப்பா ஆகிவிட்டேன். நானும் அவரும் சேர்ந்து தான் பள்ளிக்கு செல்வோம். இது என்னுடைய சித்தப்பாவாக அனுபவம். அதேபோல, சித்தப்பா உறவை மையப்படுத்தி உருவாகியிருக்கும் சித்தா திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
 

Share this story