‘மாமன்னன்’ படத்தை உணர்பூர்வமாக பாராட்டிய கமலஹாசன்... நன்றி தெரிவித்த உதயநிதி !

maamannan

‘மாமன்னன்’ படத்தை பார்த்து உணர்வுப்பூர்வமாக பாராட்டிய நடிகர் கமலஹாசனுக்கு உதயநிதி நன்றி தெரிவித்துள்ளார். 

உதயநிதி மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. வித்தியாசமான படைப்புகள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ள மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் உதயநிதியுடன் இணைந்து வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

maamannan

அரசியல் மற்றும் த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் நாளை உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் இந்த படத்திற்கு தமிழகத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் ‘மாமன்னன்’ படத்தை பார்த்து பாராட்டிய நடிகர் கமலஹாசனுக்கு உதயநிதி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் திரைப்படத்தை பார்த்ததோடு இசை வெளியீட்டு விழாவிலும் பங்கேற்று உணர்வுப்பூர்வமாக பாராட்டிய உலகநாயகன் கமலஹாசன் சார் அவர்களுக்கு மாமன்னன் படக்குழுவினர் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார். 


 

null


 

Share this story