மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனிடம் நலம் விசாரித்த கமல்ஹாசன்

மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனிடம் நலம் விசாரித்த கமல்ஹாசன்

தமிழில் நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘நேரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதன்பிறகு மலையாளத்தில் உருவான ‘பிரேமம்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கினார். இந்த படம் இந்தியா முழுவதும் நல்ல விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து பிரத்விராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கோல்டு’ இயக்கினார். இதையடுத்து அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரித்து வருகிறார். இளையராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் உருவாகி வருகிறது.  படத்தில் சாண்டி மாஸ்டர் கதாநாயகனாக நடிக்கிறார். 

இந்நிலையில், திரைப்படம் இயக்குவதிலிருந்து விலகுவதாக பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் அறிவித்திருந்தார். தனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், இதனால் படத்தை இயக்குவதை நிறுத்திக் கொள்வதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் கமலுக்காக இசை அமைத்த பாடலைக் கேட்ட கமல்ஹாசன், நன்றி கூறியும், உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Share this story