தென் ஆப்ரிக்கா செல்லும் கமலஹாசன்... ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட்

kamal

‘இந்தியன் 2’ படப்பிடிப்பிற்காக நடிகர் கமலஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் தென் ஆப்ரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் ஆகி இரு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். அனிரூத் இந்த படத்திற்கு தாறுமாறாக இசையமைத்து வருகிறார். 

kamal

இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த்த்,  பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருப்பதி, பீகார் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 

kamal

 சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்றது. இந்த படத்திற்காக கிராமம் போன்ற செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் இளமை கால சேனாபதியின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியன் 2-ல் ப்ரீயட் பகுதிகள் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பிற்காக தினந்தோறும் நடிகர் கமல் ஹெலிகாப்டரில் வந்து செல்லும் காட்சிகளும் வெளியாகின. 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் கமலஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் தென் ஆப்ரிக்கா செல்லவுள்ளனர். அங்கு 10 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. 

Share this story