தெறிக்கும் தோட்டாக்கள் : ‘KH 233’ படத்திற்காக பயிற்சி எடுக்கும் கமல்ஹாசன்.

photo

கமல்ஹாசன், எச். வினோத் உடன் கூட்டணி அமைக்கும் அவரது  233வது படத்திற்காக தற்போது தீவிர துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.


கமல் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘விக்ரம்’ லோகேஷுடன் கூட்டணி அமைத்து வெளியான இந்த படம் மாஸ் ஹிட் கொடுத்தது. கமல்ஹாசனுக்கு சூப்பரான கம்பேக்காக படம் அமைந்தது. இந்த நிலையில் அடுத்ததாக பிரபாஸ்ஸுடன் இணைந்து ‘கல்கி 2892 AD’ படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து கமல் அவரது 233வது படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகி தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, துணிவு, வலிமை ஆகிய படங்களை இயக்கி முன்னணி நடிகராக உயர்ந்த எச். வினோத் இயக்குகிறார்.

படம் எப்போது துவங்கும் என எதிர்பார்த்திருந்த வேளையில் படத்திற்காக கமல்ஹாசன் தீவிர பயிற்சி எடுக்கும் வீடியோ வெளியாகி அசர வைத்துள்ளது. ஆரம்பமே மாஸ்ஸா இருக்கே…. என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share this story