40 ஆண்டுகால நட்பு.. ஹாலிவுட் பிரபலத்தை சந்தித்த நடிகர் கமலஹாசன் !

kamal

அமெரிக்கா சென்றுள்ள கமலஹாசன், தனது ஹாலிவுட் நண்பர் மைக் வெஸ்ட்மோரை சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

சினிமாவில் சகலகலா வல்லவனாக இருப்பவர் உலகநாயகன் கமலஹாசன். தமிழ் சினிமாவில் பல புதுமைகளை புகுத்தி இன்றைக்கு அசைக்க முடியாத கலைஞனாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவரது ‘விக்ரம்’ திரைப்படம் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து தற்போது இந்தியன், கல்கி ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர எச்.வினோத், மணிரத்னம் ஆகியோரது திரைப்படங்களில் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார். 

kamal

இதையடுத்து பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ‘கல்கி’ படத்தில் வில்லனாக கமலஹாசன் நடித்து வருகிறார். இதன் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீட்டு விழா அமெரிக்காவில் நடந்த நிலையில் அதற்காக கமல் அங்கு சென்றிருந்தார். அதேபோன்று  ‘இந்தியன் 2’ படத்தின் VFX பணிகளும் அங்கு நடைபெற்று வருவதை கமல் கவனித்து வருகிறார். 

kamal

இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள நடிகர் கமலஹாசன், தன்னுடைய 40 ஆண்டுகால நண்பரான மைக் வெஸ்ட்மோரை சந்தித்து பேசினார். அப்போது இருவரும் தங்களது இனிமையான அனுபவங்களை பேசினர். ஆஸ்கர் விருதை வென்ற மை வெஸ்ட்மோர், கமலின் அவ்வை சண்முகி, தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Share this story