கவிஞர் சினேகனின் இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய கமல்ஹாசன்...

கவிஞர் சினேகன் - கன்னிகா தம்பதிகளின் இரட்டை குழந்தைகளுக்கு நடிகர் கமல்ஹாசன் பெயர் சூட்டியுள்ளார்.
பாடலாசிரியர் சினேகன் மற்றும் சின்னதிரை நடிகை கன்னிகா இருவரும் காதலித்து 2021ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சமீபத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. இதனை நெகிழ்ச்சியுடன் இருவரும் தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தனர்.
இந்த நிலையில் சினேகன் - கன்னிகா தம்பதியினர் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்துள்ளனர். அப்போது தங்களது இரட்டை பெண் குழந்தைகளை காண்பித்து அவரிடம் வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பு குறித்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட இருவரும் கமல் தங்களது குழந்தைகளுக்கு தங்க வளையல்கள் போட்டதாகவும் இரு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு காதல் கன்னிகா சினேகன் என்றும் மற்றொரு குழந்தைக்கு கவிதை கன்னிகா சினேகன் என்றும் பெயர் சூட்டியதாக தெரிவித்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
சினிமாவைத் தவிர்த்து அரசியலிலும் பயணித்து வருகிறார் சினேகன். 2018ஆம் ஆண்டில் கமல் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இக்கட்சி சார்பில் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் அக்கட்சியில் பயணித்து வருகிறார்.