ரோபோ சங்கர் பேரனுக்கு பெயர் வைத்த நடிகர் கமல்ஹாசன்...!

robo shankar
ரோபோ சங்கரின் மக்கள் இந்திரஜா – கார்த்திக் தம்பதியின் குழந்தைக்கு நடிகர் கமல்ஹாசன் பெயர் வைத்துள்ளார்.  
 
’பிகில்’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா. இதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கார்த்திக் என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். சமிபத்தில் இந்திரஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இந்திரஜா - கார்த்திக்கின் குழந்தைக்கு நடிகர் கமல்ஹாசன் 'நட்சத்திரன்” என்று பெயர் சூட்டியுள்ளார். இதனை இந்திரஜா- கார்த்திக் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றனர்.

 
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " எங்களுடைய வாழ்க்கையின் அர்த்தமான எங்கள் மகனுக்கு...உலக நாயகன், நம்மவர், அன்பு தலைவர், பத்ம பூஷன் கமல் ஹாசன் அவர்கள் தம்பிக்கு "நட்சத்திரன்" என பெயரிட்டு வாழ்த்தினார்...என்றும் உங்கள் அன்புடன் எங்கள் நட்சத்திரன் கார்த்தி.." என்று  பதிவிட்டிருக்கிறார்.
X

Share this story

News Hub