‘இந்தியன் 2’ படத்தை நிறைவு செய்த கமலஹாசன்.. சூப்பர் அப்டேட்

indian 2

‘இந்தியன் 2’ படத்தின் டப்பிங்கை நடிகர் கமலஹாசன் நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஷங்கர் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ‘இந்தியன் 2’. இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

indian 2

இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  ஏற்கனவே சென்னை, திருப்பதி, பீகார் உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்த படத்தில் ப்ரீயட் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டுள்ளது.  இந்த நடிகர் கமலஹாசன் 90 வயது தாத்தாவாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் அவரது பகுதி படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் உடனடியாக டப்பிங்கையும் கமல் முடித்து கொடுத்துள்ளார். இதற்கிடையே ‘இந்தியன் 2’ படம் குறித்து நடிகர் பாபி சிம்ஹா சுவாரஸ்சிய தகவல்களை தெரிவித்துள்ளார். அதில் இந்தியன் தாத்தா நமக்கு சூப்பர் ஹீரோ மாதிரி தான். இந்த படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. 100 சதவீதம் உறுதியாக சொல்கிறேன். விவேக் நடித்த காட்சிகள் இந்த படத்தில் இருந்து நீக்கவில்லை. இதுவரை நீங்கள் பாத்திராத விவேக் இந்த படத்தில் இருப்பார் என்று கூறியுள்ளார். 

Share this story