அமெரிக்காவில் அன்பறிவு சகோதரர்களுடன் கமல்

kamal

கமலின் 237-வது படத்தை அன்பறிவ் சகோதரர்கள் இயக்க உள்ளனர். இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். இவர் சமீபத்தில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து முடித்தார். இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அதனை தொடர்ந்து தனது 234-வது படமான 'தக் லைப்' படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து கமலின் 235-வது படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தும், 236-வது படத்தை இயக்குனர் நெல்சனும் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

kamal

ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் தற்போதுவரை வெளியாகவில்லை. கமலின் 237-வது படத்தை பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் (அன்புமணி, அறிவுமணி) சகோதரர்கள் இயக்க உள்ளனர். இவர்கள் ’மெட்ராஸ்' படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள். இவர்கள் கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களிலும் பணியாற்றி வருகிறார்கள். சமீபத்தில் இந்த படத்தின் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜ் கமல் பிலிம்ஸ் வெளியிட்டது. தக் லைப் திரைப்படத்திற்குப் பின் நடிகர் கமல்ஹாசன் சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார்.இவர்கள் இருவரும் கூலி படப்பிடிப்பில் இருப்பதால் நடிகர் கமல்ஹாசன் அமெரிக்கா சென்றார்.

kamal

அங்கு, அவர் ஏஐ தொழில்நுட்பம் குறித்து படித்து வருவதாகத் தெரிகிறது. சில நாள்களுக்கு முன் அமெரிக்காவிலிருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கமல்ஹாசன், புதிய திரைக்கதையுடன் இருப்பதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில், அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்திலிருக்கும் கமல்ஹாசனை அன்பறிவ் சகோதரர்கள் நேரில் சந்தித்து படம் குறித்து பேசி வருகின்றனர். இப்படம், டீ ஏஜிங் தொழில்நுட்பத்தில் பெரிய பொருள்செலவில் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this story