விஜய்க்கு கை மாறியதா கமல் 233 படம் ? வைரலாகும் போஸ்டர்

kh233
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள கோட் திரைப்படம் மாபெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, அடுத்ததாக தளபதி 69 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். விஜய் நடிக்கும் கடைசி படமான "தளபதி 69" படத்தின் அப்டேட்டை இன்று வெளியிடப்பட்டது. அதில், இப்படத்தை எச். வினோத் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கமலின் 233வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் படக்குழு வெளியிட்டனர். இந்த படத்தை, எச். வினோத், இயக்கவுள்தாகவும் அப்போது படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்தது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரில் "Rise to Rule" என்ற வாசகத்துடன் கமல் தீப்பந்தத்தை ஏந்தியபடிருக்கும் KH233 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், எச்.வினோத் இயக்கும் தளபதி 69 குறித்த இன்றைய அறிவிப்பிலும், படக்குழுவினர் வெளியிட்ட  போஸ்டரில் தீப்பந்தம் ஏந்தியபடி "The torch bearer of Democrarcy" என்ற வாசகத்துடன் கூடிய "தளபதி 69" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், கமல் 233 படம் கைவிடப்பட்டு, அது தளபதி 69 படமாக உருவெடுத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
 

Share this story