கமல்ஹாசன் பிறந்தநாள் விழா கோலாகலம்

கமல்ஹாசன் பிறந்தநாள் விழா கோலாகலம். 

கமல்ஹாசன் 'இந்தியன் 2' படத்தில் நடித்து முடித்துவிட்டார். இதையடுத்து, பிரபாஸின் 'கல்கி 2898 ஏடி', ஹெச்.வினோத் இயக்கும் படங்களில் அவர் நடிக்கிறார். இதற்கிடையே மணிரத்னம் இயக்கும் படத்திலும் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். 'நாயகன்' படத்திற்கு பிறகு, 37 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் இணைகின்றனர்.

கமல்ஹாசன் பிறந்தநாள் விழா கோலாகலம்

இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட்ஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசை அமைக்கிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவுக்காக ஒப்பந்தமாகியுள்ளார். கமல்ஹாசனின் 234 வது இது உருவாகிறது.  

கமல்ஹாசன் பிறந்தநாள் விழா கோலாகலம்
இந்நிலையில், 69-வது பிறந்தநாள் கொண்டாடும் கமல்ஹாசனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரது பிறந்தநாள் விழா, சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

Share this story