கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதி
1730534943336
நடிகர் கமல்ஹாசனின் அண்ணனும் நடிகருமான சாருஹாசன், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 1986-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘தபரன கதே’ படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றவர், இவர். இந்நிலையில் 93 வயதான சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை நடக்க இருப்பதாக அவர் மகள் சுஹாசினி தெரிவித்துள்ளார். அவர் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.